Sri AndAl / Sri gOdA dEvi – audio (received from knowledgeable quarters) Transcript of the audio: Sanatana dharma is the name given by the wise to the greatest treasure of this land .All of us are preservers of this treasure and I am one of them.I am one of the preservers.This is my introduction.The rest […]

சுமார் 600 வருடங்கள் முன்பு அஹோபிலமடத்தை தோற்றுவித்த ஆசார்ய சிரேஷ்டர் ஆதிவண் சடகோபன் .
ஸ்ரீலக்ஷ்மீந்ருஸிம்ஹனின் திருவுள்ளத்தால் மலர்ந்த இம்மடம் ,வழி வழியாக அழகியசிங்கர் எனும் பட்டத்துடன் வரும் ஜீயர்களின் ஆன்மீகத் தொண்டால் சிறந்து விளங்குகிறது.

இப்பாசுரத்தில் பல மூன்றுகளை பார்க்கலாம்:

1.அம்பரம்,தண்ணீர்,சோறு-ஆகாயம்,கடல்,பூமி மூன்றிலும் நிறைந்துள்ள கண்ணன்

2.மூன்றடியால் மூவுலகளந்த உம்பர்கோமானைப் போற்றுதல்

3.கண்ணனின் பெற்றோராக,ஸ்ரீதேவி,பூதேவி,நீளாதேவி மூவருக்கும் மாமனாரும்,மாமியாரும் ஆன நந்தகோபாலன்,யசோதை தம்பதியர்

அடியார்களை இனங்கண்டு போற்றுவது ஆண்டாள் உள்ளிட்ட ஆழ்வார்களின் தன்மை.
அங்ஙனமே பூதத்தாழ்வார் 2ம் திருவந்தாதியில் தன் தோள்கள் இராமனைத் தொழுவதை விடவும்,இராமனைத் தொழும் பாகவதர்களைத் தொழுதலால் சிறப்புறுகிறது என்றார்

இராமனின் வனவாசத்திற்கு பழி சுமத்தப்பட்டோர் பலர்,ஆனால் பழியை தன் மேல் ஏற்றுக்கொண்டது பரதனின் நிலைப்பாடு.

கூனி-வேலைக்காரியான என் சொல்லுக்கு கைகேயி முக்கியத்துவம் ஏன் அளித்தாள்?
கைகேயி-என் வேண்டுகோளை அரசனாகிய தயரதன் ஏன் ஏற்றான்?
தயரதன்-தனக்கு அரசுரிமை இருந்தும்,அதை ஏன் மூத்தவன் இராமன் கோரவில்லை?
அண்ணலின் ஆட்சியில்,பணிவிடை செய்யும் கொடுப்பினை அற்றவன் யான்-பரதன்.
“அடியார்க்கடியான்” பரதனே.!!🙏🙏

நங்காய்! நாணாதாய்! நாவுடையாய்!- அடியாரின் இலக்கணங்களைப் பறைசாற்றும் செழுங்குணங்கள் உடைய முதலாசார்யன் ஸ்வாமி நம்மாழ்வார் மற்றும் சரமாசார்யன் ஸ்வாமி தேசிகன்

நங்காய்!-பரமபுருஷனிடத்தில் ஸ்ரீயைப் போன்றோர்

நாணாதாய்!-அகங்காரம் அணுவளவுமற்றோர்

நாவுடையாய்!-இறைவனின் பொருள்சேர் புகழ்மொழிகளை தித்திக்கப் பேசும் நாவுடையோர்🙏

சரணாகதி தத்துவத்தை உணர்த்திய ஆசார்யனாய்,இராமபிரான், இவ்வாறு புறாக்களின் தியாகக்கதையை முன்னிறுத்தி “இராமதேசிகன்” என்ற பெருமையை உடையவனாய் திகழ்கிறான்.